• Jul 24 2025

15 லட்ச ருபாய் பைக்கை கிப்ட் ஆக கொடுத்த அஜித்! அதுவும் யாருக்கு தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் ஏற்கனவே ரேஸிங், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் உள்ளிட்ட விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தி வந்த நிலையில் சமீப காலமாக பைக் ரைடில் ஈடுபட்டு வருகிறார். அத்தோடு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவர் பைக் ரைடு சென்று வருகிறார்.

மேலும் அவர் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தையும் தற்போது தொடங்கி இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட் கேட்டு வந்த நிலையில் அவர் நிறுவனம் பற்றிய அறிக்கை தான் வந்தது.

எனினும் தற்போது அஜித் அவருடன் பைக் ரைடு செய்த சுகத் என்ற நபருக்கு BMW F850 GS பைக்கை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். எனினும் அதன் விலை சுமார் 15 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பைக் ரைடு சென்ற போது அதற்கான ஏற்பாடுகளை செய்தது அவர் தானாம். 





Advertisement

Advertisement