• Jul 24 2025

இமயமலையில் என்கொடி பறந்தால் உனக்கென்ன- சென்னை விமான நிலையத்தில் மாஸாக என்ட்ரி கொடுத்த அஜித்- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக உள்ளவர் அஜித். இவர் பற்றிய எந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியானாலும் அது அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான்.


 அஜித் நவீன தொழில் நுட்பத்தில் கையாளுவதில் கில்லி என்றாலும், சமூக வலைத்தளங்களில் தலைகாட்டுவதை விரும்புவது இல்லை.இவரின் காதல் மனைவியும், நடிகையுமான ஷாலினியும், எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லாமல் இருந்த நிலையில், திடீர் என கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார்.


 இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து சில மாதங்களே ஆகும் நிலையில், இவரை பல ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள்.மேலும் அவ்வப்போது, தன்னுடைய கணவர் அஜித் மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, வருகின்றார்.


மேலும் அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement