• Jul 24 2025

என்ன சேர் நீங்க இப்படி இருக்கிறீங்க- சூட்டிங்கிற்கு லேட்டாக வந்தவருக்கு அஜித் செய்த உதவி- நெகிழ்ச்சியான சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது துணிவு படம். முன்னதாக தீபாவளியையொட்டி இநத்ப படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதன் சூட்டிங் தள்ளிப் போனது. தற்போது இந்தப் படம் பொங்கல் விருந்தாக, விஜய்யின் வாரிசு படத்துடன் இணைந்து ரசிக்களின் பார்வைக்கு வரவுள்ளது.

படத்தின் ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் பொதுவாக அஜித் குமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு நடந்து கொள்வார் என அவரின் சக நடிகர்கள் கூறுவார்கள். 


இந்நிலையில் தன்னுடன் பணியாற்றும் மேக்கப் மேனுக்கு உதவி செய்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.ஒரு படத்தில் அஜித்திற்கு மேக்கப் போடும் நபர் தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். இதை குறித்து அஜித் அந்த நபரிடம் கேட்டும் போது, " இரன்டு பஸ் பிடித்து தான் சார் இங்க வர முடியும்.. பஸ்சில் வரும் போது அதிகம் கூட்டமாக வேற இருந்தது அதனால் தான் தாமதமாக வந்தேன்" என அஜித்திடம் அந்த மேக்கப் மேன் கூறியுள்ளார்.

’உனக்கு பைக் ஓட்ட தெரியுமா?’ என்று அஜித் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ’தெரியும்’ என பதில் கூற, அன்றே தனது மேனேஜரிடம் பேசி புதிய பைக் ஒன்றை மேக்கப் மேனுக்கு பரிசாக அஜித் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.     


Advertisement

Advertisement