• Jul 24 2025

அஜித் அதைப் பண்ணுறாரு உன்னால அதைப் பண்ண முடியுமா?- ஷகிலாவை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகிலா. இவர் மலையாள படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து பல கவர்ச்சிப் படங்களில் நடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்.

கேரளாவில் கூட மம்மூட்டி, மோகன்லால் திரைப்படங்களை விட ஷகிலாவின் திரைப்படங்களுக்குத்தான் அமோக வரவேற்பு கிடைக்குமாம்.இதனால் கோபம் கொண்ட நடிகர்கள் தியேட்டர் அதிபர்களிடமும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் இனிமேல் ஷகிலா சம்பந்தப்பட்ட எந்தப் படங்களும் வெளிவரக்கூடாது என்றெல்லாம் பேச்சு வந்ததாம். 


இவருக்கு கிடைத்த வரவேற்பு வேறு எந்த நடிகைக்கும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.ஒரு சில சினிமா படங்களிலும் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார் ஷகிலா. பாஸ் என்ற பாஸ்கரன் என்ற படத்திலும் ஒரு கணக்கு டீச்சராக வந்து அனைவரையும் மிரள வைத்திருப்பார் ஷகிலா.


தனியாக யுடியூப் சேனலில் ஒரு சில நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டு வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷகிலா நடிகர் அஜித்தை பற்றி ஒரு விமர்சனம்  முன்வைத்தாராம். அதாவது அஜித்திற்கு ஆடவே தெரியாது என்று கூறியிருந்தாராம்.


இதை கேள்விப்பட்ட பயில்வான் ரங்கநாதன் ஷகிலாவை பார்த்து ‘ஏம்மா ஷகிலா, அஜித் இந்த வயசுலயும் ஆடுறாரு, நடிக்கிறாரு, உன்னால ரெண்டு மாடி ஏறி இறங்க முடியுமா? மேலும் அஜித்திற்கு எவ்வளவு உடல் உபாதைகள் இருக்கிறது? அதையெல்லாம் வைத்துக் கொண்டும் ஆடிக் கொண்டுதானே இருக்கிறாரு, அவர பத்தி பேசுறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை’ என்று வெளுத்து வாங்கியுள்ளாராம் என்று கூறப்படுகின்றது.




Advertisement

Advertisement