• Jul 24 2025

அஜித் சேர் மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் மிரட்டி விட்டாரு- கூல் சுரேஷின் வேறலெவல் விமர்சனம்.!

stella / 2 years ago

Advertisement

Listen News!

எச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் துணிவு.இந்தப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. அதன்படி இப்படம் இன்று காலை 1 மனிக்கு வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.  'வலிமை' படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் சரிக்கட்டும் விதமாக 'துணிவு' படம் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் படத்தின் முதல் காட்சியை பார்த்த கூல் சுரேஷ் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, படம் நல்லாருக்கு. என்னோட ஸ்டைல்ல சொல்லனும்னா, 'வெந்து தணிந்தது காடு' துணிவுக்கு வணக்கத்தை போடு. அஜித் சாருக்கு வணக்கத்தை போடு. அஜித் சார் மேல உள்ள அன்பால காலைலயே படம் பார்க்க வந்து இருக்கோம்.

'துணிவு' படத்துல ங்கொப்பன் மவனே டான்ஸ்ல செம்மைய பண்ணியிருக்காரு அஜித். அந்த மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் மிரட்டி விட்டாரு. இந்த மாதிரி படம் அவர் நெறைய பண்ணனும் என பேசியுள்ளார். கூல் சுரேஷ் பேசியுள்ள இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'துணிவு' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.




Advertisement

Advertisement