• Jul 26 2025

அஜித் நடித்த வலிமை படம் ரிலீசாகி ஓராண்டு நிறைவு..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு எப்பவுமே மறக்க முடியாத படமாக அமைந்தது. ஏனெனில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியதில் இருந்து ரிலீஸ் வரை அப்டேட் கேட்டு அவர்கள் செய்த அட்ராசிட்டியை யாராலும் மறக்க முடியாது. 

குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்டது. பிரச்சாரத்திற்கு சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்டேட் கேட்டதெல்லாம் வேறலெவலில் டிரெண்ட் ஆகின.

இப்படி அப்டேட்டுக்காக பல மாதங்கள் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இறுதியில் அடுக்கடுக்கான அப்டேட்டுகளை வெளியிட்ட படக்குழு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வலிமை படத்தை ரிலீஸ் செய்தது. கடந்தாண்டு ரிலீசான முதல் பெரிய பட்ஜெட் படம் வலிமை தான்.

வலிமை படம் சிங்கிளாக ரிலீஸ் ஆனதால், இப்படத்தை கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்தனர். இதனால் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாளில் ரூ.36 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

 இப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வலிமை படம் ரிலீசாகி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். 


Advertisement

Advertisement