• Jul 26 2025

ரசிகர் மரணம்...விஷயம் கேள்விப்பட்டு அஜித் எடுத்த முடிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் நேற்று  துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது.எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பல பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. இதனால் இப்படம் எதிர்வரும் நாட்களில் வசூலில் தெறிக்க விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில்  சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சென்னை ரோகிணி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த பரத்குமார் எதிர்பாராத விதமாக உயிழந்துள்ளார்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட அஜித் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு தனிப்பிட்ட முறையில் உதவி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement