தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக பார்க்கப்படும் நடிகர்கள் தான் அஜித் மற்றும் விஜய். அவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 11ம் தேதி வெளியாகவுள்ளது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரு படங்கள் குறித்த அப்டேட்டும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு இப்படங்களின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
இந்த இரு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன் அஜித் - விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் ரூ. 3 லட்சம் சம்பளமாக வாங்கினாராம்.
ஆனால், விஜய்யின் சமகால போட்டி நடிகரான அஜித், அப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!