• Jul 24 2025

20 ஆண்டுகளாக வடிவேலுவை வெறுத்து ஒதுக்கிய அஜித்- ஒரு வார்த்தையில் ஏற்பட்ட பிளவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில்பைக் மெக்கானிக்காக இருந்து ஹீரோவாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித்.  இவர் அடுத்ததாக தனது 62 வது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இப்படம் குறித்த அப்டேட் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.

இந்த நிலையில் அஜித் குறித்த ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இவரது நடிப்பில் ககடந்த 2002ம் ஆண்ட வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ராஜா. இப்படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்திருந்தார்.


 அப்படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையேயான காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்தன. அதன்பின் இந்த கூட்டணி இன்று வரை சேர்ந்து நடிக்கவில்லை. இப்படி 20 ஆண்டுகளாக வடிவேலுவை அஜித் தன் படத்தில் நடிக்க வைக்காததற்கு ராஜா படத்தின் போது நடந்த மோதல் தான் காரணம் என கூறப்படுகிறது.

ராஜா படத்தின் கதைப்படி அஜித்தின் மாமாவாக நடித்திருப்பார் வடிவேலு, அந்த கேரக்டருக்கு ஏற்ப அவர் அஜித்தை அப்படம் முழுக்க வாடா போடா என்று தான் அழைப்பார். ஷூட்டிங் முடிந்த பின்னும் அதே பாணியில் வாடா போடா என வடிவேலு அழைத்தது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் இயக்குநரிடம் இதுபற்றி கூறி இருக்கிறார் அஜித். இயக்குநர் இதனை வடிவேலுவிடம் கூற, அவர் இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் மீண்டும் அஜித்தை அவ்வாறே அழைத்து வந்திருக்கிறார்.


இதையடுத்து அப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வடிவேலு உடன் பேச்சைக் குறைத்துக் கொண்ட வடிவேலு, இனி உன் சாவகாசமே வேண்டாம் என்று அன்று முடிவெடுத்தாராம். அதன்பின் தன்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குநர்கள் வடிவேலு பற்றி பேச்சை எடுத்தால் நோ சொல்லி திருப்பி அனுப்பிவிடுவாராம் அஜித். ராஜா படத்தின் போது நடந்த இந்த பிரச்சனையால் தான் அஜித்தும், வடிவேலும் கடந்த 20 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவே இல்லையாம் என்று தகவல் கசிந்துள்ளது.


Advertisement

Advertisement