• Jul 24 2025

ரசிகர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த அஜித்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு  வெளியானது. அத்தோடு இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறி இருந்தனர். 

ஆனால் இந்த கூட்டணி ஷூட்டிங்கை தொடங்க இருந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது லைகா. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தனர்.ஆனால் இது குறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.


இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அஜித்தின் தந்தை அண்மையில் இறப்புக்குள்ளானதால்  ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாவதற்கு இன்னும் சில மாதம் ஆகலாம் என கூறப்பட்டு வருகின்றது.

இப்படியான நிலையில் அஜித் பல ஆண்டுகளுக்கு முதல் ரசிகர்களுக்கு புத்தாண்டு தெரிவித்திருக்கின்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement