• Jul 22 2025

முதல் 3இடங்களையும் தட்டித் தூக்கிய 'துணிவு'.. இதுவரை யாரும் செய்யாத மாபெரும் சாதனையை புரிந்த அஜித்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர் அஜித். இதனால் தான் இவரை ரசிகர்கள் 'தல' என செல்லமாக அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 


அதே போல் இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். அந்தவகையில் அஜித் நடிப்பில் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருந்தது.


வெளியான நாள் முதல் இன்றுவரை இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களையே பெற்றிருக்கின்றது. அதுமட்டுமல்லாது வெளியாகிய நாள் முதலே எதிர்பாராத அளவிற்கு வசூல் சாதனையையும் நிகழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றது. அத்தோடு அஜித்தின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாகவும் மாறி இருக்கின்றது.


அந்தவகையில் இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரும் துணிவு திரைப்படத்தின் மூலம் ரூ. 110 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் துணிவு திரைப்படமானது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. 


இந்நிலையில் இப்படம் வெளிவந்து சில நாட்களே ஆகும் நிலையில் இந்தியளவில் முதல் மூன்று இடத்தையும் துணிவு படமே பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது No. 1 - துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன், No.2 - துணிவு தமிழ், No. 3 - துணிவு தெலுங்கு என நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்து துணிவு திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement