• Jul 24 2025

அஜித்தை அடித்து துன்புறுத்திய இயக்குநர் பாலா – நடந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குநர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.


தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் அஜித்தையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆம், பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் தான் முதலில் நடிக்கவிருந்தது. ஆனால், அப்படத்தில் அஜித்தை கொடுமைப்படுத்தியதோடு, அவரை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.

இதனால் தான் அப்படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும், தயாரிப்பாளரிடம் ஏற்பட்ட பிரச்சனை அஜித்திற்கு தலைவலியாக இருந்ததால் எவ்ளோவ் பெரிய ஹிட் அடிச்சாலும் பரவாயில்ல நான் இந்த படத்தில் நடிக்கல என கூறி விலகிவிட்டாராம். இந்த சம்பவத்தை கேட்டு அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement