• Jul 25 2025

தீ தளபதிக்கு போட்டியாக வந்த கேங்ஸ்டா.. அனல் பறக்கும் அஜித்தின் அடுத்த பாடல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு திரைப்படம் இப்போது  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக வெளியாக இருக்கும் மூன்றாம் பாடலான கேங்ஸ்டா இன்று மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் இதுவரை எந்த படமும் செய்யாத ஒரு விஷயத்தையும் துணிவு திரைப்படம் செய்து காட்டி உள்ளது.அதாவது படத்தின் மூன்றாம் சிங்கிள் அறிவிப்பு வெளியாகும் போதே அதன் பாடல் வரிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனினும் அந்த வகையில் வெறித்தனமாக இருந்த அந்தப் பாடல் வரிகள் அஜித் ரசிகர்களை பயங்கர உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதிலும் சீண்டுனா சிரிப்பவன், சுயவழி நடப்பவன் என தொடங்கும் அந்த பாடல் வரிகள் அனைத்தும் அனல் பறக்கிறது. ஏற்கனவே வாரிசு திரைப்படத்திலிருந்து வெளிவந்த தீ தளபதி பாடல் துணிவுக்கு பதில் கொடுப்பது போல் இருக்கிறதென  சொல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து இப்போது வெளியாக இருக்கும் துணிவு மூன்றாம் பாடலின் வரிகளும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இருக்கிறது. இப்படி இரு படங்களுக்கும் மறைமுகமாக ஒரு போட்டி நிலவி வருகிறது. அதனாலேயே இந்த பாடலின் வீடியோவை காண ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலையிலிருந்தே பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்த அந்த பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. பாடலின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.அத்தோடு  அஜித் கருப்பு உடை, கண்ணாடி என கேங்ஸ்டர் தோற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் படு மிரட்டலாக இருக்கிறார். வாரிசு படத்தில் தீ தளபதி பாடல் இதே போன்று தான் நெருப்பு மற்றும் கருப்பு உடை என இருந்தது.எனினும் தற்போது வெளிவந்துள்ள இந்த பாடல் அதற்கு பதில் அளிக்கும் வகையில் அட்டகாசமாக இருக்கிறது.




Advertisement

Advertisement