• Jul 24 2025

ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் என்றுமே இல்லாதளவிற்கு பெரியளவில் நஷ்டத்தை கொடுத்த 'அகிலன்'.. கடும் அப்செட்டில் படக்குழு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயம்ரவி நடிப்பில் 'அகிலன்'திரைப்படம்  வெளியாகி இருக்கின்றது. இப்படத்தினை இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் உட்படப் பலர் நடிக்கின்றனர். பெருங்கடலில் நடக்கும் அரசுக்கு எதிரான தவறான விஷயங்களை பற்றி கூறும் கதைக்களத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


அதாவது கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ஆனது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முதல்நாள் நல்ல விமர்சனங்களை கொடுத்திருந்தாலும், அடுத்தடுத்து விமர்சனங்கள்  கொஞ்சம் மோசமாக வர படத்தின் வசூலும் குறைந்தது.


இந்நிலையில் தற்போது அகிலன் படமானது கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் இப்படம் மட்டுமே மிகவும் மோசமான வசூல் செய்த படமாக அமைந்துள்ளதாம். இதனால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement