• Jul 25 2025

தயாரிப்பாளர்களின் தலையில் மண்ணை வாரிப் போட்ட அக்‌ஷய் குமார்.. மோசமான வசூலில் 'செல்ஃபி'.. கடும் அப்செட்டில் படக்குழு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் நடித்து ஹிட் படங்கள் கொடுத்து தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகர்களுள் ஒருவராக வளர்ந்தவர் அக்‌ஷய் குமார். அந்தவகையில் 1990களில் ஆக்‌ஷனில் தன் பயணத்தைத் தொடங்கிய அக்‌ஷய், தொடர்ந்து குடும்பம், காதல் என அனைத்து ஜானரிலும் தரமான  ஹிட் படங்கள் கொடுத்து குறுகிய காலத்திலே இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்தார்.

மேலும் ஒரு ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஹிட் படங்கள்  கொடுத்த நடிகர் எனும் சாதனையை இன்று வரை தன் வசம் வைத்துள்ள நடிகர் அக்‌ஷய் குமார், சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.


இந்நிலையில், 2019இல் மலையாளத்தில் வெளியாகி அமோக வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசன்ஸ்' படத்தை ரீமேக் செய்து முன்னதாக இவரது 'செல்ஃபி' படம் வெளியானது. பிரபல நடிகரான இம்ரான் ஹாஸ்மியுடன் அக்‌ஷய் குமார் இணைந்து நடித்த இந்தப் படம் பெப்ரவரி 24 வெளியானது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு நாள்கள் கடந்துள்ள நிலையில், செல்ஃபி படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன் வசூலிலும் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது மிக மோசமான ஓப்பனிங்கை செல்ஃபி படம் பெற்றுள்ளதாகவும், அக்‌ஷய் குமாரின் படங்களில் மிக மோசமான வசூலை ஈட்டிய படம் இந்தப் படம் தான் என்றும் பாலிவுட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


அந்தவகையில் செல்ஃபி படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 3 கோடிகள் மட்டுமே வசூல் செய்ததாகவும் இரண்டாம் நாள் 5.86 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 150 கோடி செலவில் இப்படமானது இவ்வாறு குறைந்த அளவிலான வசூலைப் பெற்று வருவதால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளனராம்.

Advertisement

Advertisement