• Jul 25 2025

அவரது நக்கல் வெங்காயம் எல்லாம் வேலைக்கு ஆகாது- சமுத்திரக்கனியை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.மேலும் சினிமா குறித்த விமர்சனங்களும் அதன் ப்ளஸ், மைனஸ்களும் உடனுக்குடன் ரசிகர்களின் பார்வைக்கு கிடைத்து விடுகின்றன. 

அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் படங்களுக்கு சிறப்பான விமர்சனங்களும் பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு சுமாரான விமர்சனங்களும் கிடைக்கும் சூழல் உருவாகி வருகிறது.  முன்னணி நடிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 


தற்போது பிரபல இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியும் இதுகுறித்து விமர்சித்துள்ளார். அதிலும் போன் வைத்திருக்கும் பலரும் ரிவ்யூ கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ரிவ்யூ சொல்வது ஒருவரின் தனிப்பட்ட கருத்து , ஆனால் தரமான படமாக இருந்தால் அது கண்டிப்பாக ஓடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது குறிப்பாக அண்மையில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதில் காவல் துறை அதிகாரியாக சமுத்திரகனியும் நடித்திருந்தார்.த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.


இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.இதுகுறித்துதான் தற்போது சமுத்திரக்கனி பேசியுள்ளார். இதனிடையே, அவரது இந்தக் கருத்தை குறிப்பிட்டு இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். போர் தொழில் போன்ற சிறிய படங்களை கொண்டாடியதில், செல்போன் வைத்துள்ள சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ள அவர், வாய் இருக்குன்னு எதையாவது உளற வேண்டாம் என்றும் சமுத்திரக்கனிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பணம் கொடுத்துதானே படத்தை பார்க்கிறார்கள் என்று கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், குறை இருந்தால் சுட்டிக் காட்டுவது நுகர்வோரின் உரிமை என்றும் கூறியுள்ளார். அதனால் சமுத்திரக்கனியின் நக்கல், வெங்காயமெல்லாம் வேலைக்கு ஆகாது என்றும் அவரது வேலையை உருப்படியாக பார்க்கும்படியும் கூறியுள்ளார். மொக்கைப் படங்கள் தொடர்ந்து விமர்சனங்களில் கிழித்து தொங்கவிடப்படும் என்றும் அவர் உறுதியாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement