• Jul 26 2025

அதெல்லாம் எப்போதோ மலை ஏறி விட்டது-ஊரே அவன காரி துப்புது-அசீமை வெளுத்து வாங்கிய பிரபல தொகுப்பாளினி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் அசீம். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவருக்கு எதிராக நிறைய எதிர்ப்புக்கள் கிளம்பின.

இருந்தாலும் தற்பொழுது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் நாமிநேஷனில் வாக்குகளை பெற்று காப்பாற்றப்பட்டு வருகின்றார்.

அசீம் விஜேவாக அறிமுகமாகி பின்னர் பின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, காமெடி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். இறுதியாக சன்டிவியில் ஒளிபரப்பாகிய பூவே உனக்காக சீரியலில் நடித்திருந்தார்.


இந்நிலையில் அசீமுடன் இணைந்து பணியாற்றிய பிரபல தொகுப்பாளினியான சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் அசீம் நினைப்பது போல ஆண் பெண் என்ற வேறுபாடுகள் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது அதில் அசீம் மிகவும் பின்தங்கி இருக்கிறார். மேலும் அசீம் ஒரு டாக்கில் பிக் பாஸ் வீட்டில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் போட்டியாளர்கள் இருந்த போது அவர்களை தாழ்த்தி பேசியதை நினைவு கூறி அசீம் நான் தான் இந்த பிக் பாஸ் வீட்டில் முதன்மையானவன் என்ற நினைப்பு அவரிடம் இருக்கிறது. அது தவறு கிடையாது ஆனால் அது ஒரு எல்லையோடு இருக்க வேண்டும். அந்த எல்லையை தாண்டி மற்றவர்களை அசிங்கப்படுத்தக் கூடாது என்று கூறினார்.


மேலும் தான் அசீமுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் அதனால் எனக்கு அவரை பற்றி தெரியும், அசீமினால் பலரும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்றிருக்கின்றனர். மேலும் அவருடன் நடித்த பல கதாநாயகிகள் அதிகமாக அழுதிருப்பதெல்லாம் நடந்திருக்கிறது என்று நாள் கேள்வி பட்டிருக்கிறேன். இப்போதுதான் இதனை பலரும் பேட்டியில் சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த விஷியங்கள் எல்லாம் முன்பே நடந்து விட்டது. தொடக்கத்தில் அசீம் முதல் சீரியலில் நடிக்கும்போது நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அதற்கடுத்து இரண்டு சீரியல்களில் தொடர்ந்து நடித்திருந்தார். அந்த சீரியல்களில் பல பிரச்சனைகள் அசீமினால் வந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement