• Jul 24 2025

பிக்பாஸிலிருந்து பிளான் பண்ணி வெளியேற்றப்படும் போட்டியாளர்கள்... எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு விஷயம் தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசனானது நடைபெற்று வருகின்றது. இந்த சீசனானது முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், வெற்றியை  தக்க வைத்து கொள்ள மீதம் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சியை விளையாடி வருகிறார்கள்.


இந்நிகழ்ச்சியிலிருந்து வாராவாரம் ஒருவர் வெளியேற்றப்படுவது வழமை. அந்த வகையில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜனனி வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.


மேலும் இந்த வாரம் தனலட்சுமி வெளியேறப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவ்வாறாக ராம், ஜனனி, தனலட்சுமி ஆகியோரை பிளான் பண்ணி தான் வெளியேற்றி வருவதாக தற்போது ஒரு சர்ச்சை கருத்து நிலவி வருகின்றது.


அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வந்த போட்டியாளர் ராம், ஜனனி, மற்றும் தனலட்சுமி ஆகியோர், தங்களுடைய பி.ஆர்.ஓ மூலம் பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று வருவதாக ஒரு தகவல் சமீபத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய  வைத்தது.

இதனால் தான் விஜய் டிவி பிளான் பண்ணி அவர்களை வெளியேற்றி வருவதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement