• Jul 23 2025

நீங்க கட்ட சொன்ன லைட் வெளிச்சம் எல்லாம் இன்னைக்கு என் மேல படுது- சரிகமப ஷோவில் எமோஷனலான சூரி!

stella / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் ஜோக்கராக காமெடி காட்சிகளில் நடித்து வந்த சூரிக்கு சரியாக காமெடி கூட வரவில்லை என விமர்சித்து வந்த பலரும் விடுதலை படத்தில் சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டு போயுள்ளனர். காதல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பெண்களை நிர்வாணப்படுத்தி போலீஸ் அதிகாரிகளே கொடுமைப்படுத்தும் போது கோபப்படும் காட்சிகளிலும் தனது தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் சூரி. 

விடுதலை 2 படத்திலும் சூரிக்கு வெயிட்டான ரோல் இருக்கும் நிலையில், கொட்டுக்காளி உள்ளிட்ட மேலும், சில படங்களிலும் ஹீரோவாக கமிட் ஆகி உள்ளார்.சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பாக சில படங்களில் லைட் மேனாக பணியாற்றி இருக்கிறார் நடிகர் சூரி. கோடா லைட் கட்டுறது, பேபி லைட் போடுவது என கஷ்டப்பட்டு வேலை பார்த்த சூரியின் முதல் முதலாளியை சரிகமப நிகழ்ச்சியில் சந்தித்த நிலையில், ரொம்பவே எமோஷனலாகி விட்டார்.


 அதன் காட்சிகளை தற்போது ஜீ தமிழில் சரிகமப லேட்டஸ்ட் ப்ரமோவாக வெளியிட்டுள்ளனர். தொகுப்பாளினி அர்ச்சனா நம்மளோட இந்த சரிகமப ஷோவுக்கு லைட் மேனாக உள்ள நடராஜ் அண்ணனை மேடைக்கு அழைக்கிறேன் என அழைத்த நிலையில், சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சிக்கு சென்ற சூரி தனது முதல் முதலாளியை பார்த்து நெகிழ்ந்து போனார்.


ஊருக்குப் போகாத இங்கேயே இரு கண்டிப்பா எதாவது வாய்ப்பு கிடைக்கம்னு நான் டவுன் ஆகும் போதெல்லாம் நடராஜ் அண்ணன் தான் எனக்கு ஊக்கம் கொடுப்பாரு.. நடராஜ் அண்ணே.. நீங்க கட்ட சொன்ன லைட் வெளிச்சம் எல்லாம் இன்னைக்கு என் மேல படுதுண்ணே என ரொம்பவே உருக்கமாக பேசிய அழகான தருணங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.


Advertisement

Advertisement