• Jul 25 2025

"எல்லா இடமும் நம்ம இடம்தான்" - ஆட்ட நாயகனாக கலக்கும் விஜயின் வாரிசு ட்ரைலர் படைத்த சாதனை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

 மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில் ஆக்சஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல தெரிகின் றது. 

ட்ரைலரில் வரும் "எல்லா இடமும் நம்ம இடம் தான்" மற்றும் "கிரௌண்ட் மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம், ஆனா ஆடியன்ஸ் எல்லாரும் ஒருத்தர மட்டும் தான் பார்ப்பாங்க. ஆட்ட நாயகன்" உள்ளிட்ட வசனங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் வெளியான ஒருமணிநேரத்தில் 5.1M பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.




Advertisement

Advertisement