• Jul 25 2025

பல கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன்.

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவரது திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

எனினும் அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியளவில் கோடிக்கணக்கில் வசூலை குவித்தது. அப்படம் தெலுங்கை விட ஹிந்தியில் பெரியளவில் வசூலை வாரி குவித்தது என்றே கூறலாம்.

புஷ்பா திரைப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. அத்தோடு அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் பரவின.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வந்த விளம்பர பட வாய்ப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ.10 சம்பளத்துடன் குட்கா மற்றும் மதுபான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் அல்லு அர்ஜுன் நிராகரித்துள்ளாராம் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அத்தோடு அவர் ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 7.5 கோடியை சம்பளமாக பெறுகிறாராம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement