• Jul 25 2025

ஆல்யா ரொம்ப ரொம்ப லக்கி-புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் கூட்டம்!- அடடே இது தான் விஷயமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபல்யமான காதல் ஜோடியாக இருப்பவர்கள் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் இந்த சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்ததைத் தொடர்ந்து காதலர்கள் ஆகி தற்பொழுது கணவன் மனைவி ஆகியுள்ளனர்.

இவர்களுக்கு ஐலா - அர்ஷ் என 2 குழந்தைகள் உள்ளனர்.முதல் குழந்தை பிறந்த உடனே ஆல்யா சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். 6 மாதம் தீவிர உடற்பயிற்சிக்கு பின்பு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.பின்பு அவருக்கு 2வது குழந்தை பிறக்க சீரியலில் இருந்து விலகினார். 


தற்போதைக்கு ஆல்யா சின்னத்திரையில் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆனால் கூடிய விரைவில் அவர் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் சன் டிவியில் அவர் நடிக்க போவதாகவும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இப்படி இருக்கையில் தற்போது உடல் எடையை குறைக்கும் பணியில் ஆல்யா ஈடுப்பட்டுள்ளார்.

15 நாட்களில் 5 கிலோ வரை எடையை அவர் குறைத்துள்ளதாக கூறப்படுகின்றது.இதற்காக முறையான பயிற்சியாளர் மூலம் ஆல்யா உடற்பயிற்சி எடுத்து வருகின்றார்.அவரது இந்த முயற்சிக்கு கணவர் சஞ்சீவ் மட்டுமல்லாது ஞ்சீவின் அம்மாவும் துணை நின்று வருகின்றார்.


இதனால் ரசிகர்கள்  சஞ்சீவ் மற்றும் சஞ்சீவின் அம்மாவையும்  புகழ்ந்து தள்ளுகின்றனர். வெயிட் லாஸ் மட்டுமில்லை பெண் எடுக்கும் எல்லா முயற்சியிலும் குடும்பம் துணையாக நின்றால் அதுவே பாதி வெற்றிக்கு சமம், அந்த வகையில் ஆல்யா ரொம்ப ரொம்ப லக்கி என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். ஆல்யாவின் வெயிட் லாஸ் தொடங்கி அவரின் ரீ என்ட்ரி என சஞ்சீவ் எல்லா நேரத்திலும் ஆல்யாவுக்கு துணையாக நிற்பது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.


Advertisement

Advertisement