• Jul 25 2025

சுற்றுலா செல்லும் தனது கணவருக்கு விலையுயர்ந்த பரிசினை வழங்கிய ஆல்யா மானாசா- வாஃவ் சூப்பர் கிப்ட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து விட்டது. அந்த ஆண்டு கூட அதிகமான வெளிளித்திரை பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

அண்மையில் கூட நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா திருமணம் நடந்தது. பிரபலங்கள் பலரும் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து கூறி இருந்தார்கள்.அதேபோல் சின்னத்திரையிலும் நிறைய பிரபலங்கள் நிஜத்தில் இணைந்துள்ளனர். 

அப்படி ராஜா ராணி என்ற தொடர் மூலம் பிரபலம் ஆகி, காதலித்து திருமணம் செய்து இப்போது இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி.சஞ்சீவ் கயல் தொடரில் நடிக்க ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் நடிக்க இரண்டு தொடர்களும் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகிறது.

நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானசா குறுகிய காலகட்டத்திலேயே உடல் எடையை குறைத்துள்ளார் எனவே அவருக்கு இது எனது பரிசு என ஒரு ஹேன்பேக்கை பரிசளித்தார்.

தற்போது துபாய் சென்றுள்ள சஞ்சீவ்-ஆல்யா மானசா நியூஇயரை அங்கு கொண்டாட உள்ளார்கள். ஆல்யா மானசா தனது கணவருக்கு விலையுயர்ந்த சூட் கேஸ் ஒன்றை பரிசளித்துள்ளார்.


அதனை சஞ்சீவும் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்ய ரசிகர்கள் இந்த பிரான்ட்ஆ சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement