• Jul 26 2025

கால் உடைந்தாலும் கடமை தவறாத ஆல்யா மானசா- சஞ்சீவ் வெளியிட்ட வீடியோ- கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியவர் தான் ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து நடிகையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்த சீரியல் மூலம்  இவர் பாப்புலர் ஆனதோடு இந்த சீரியலில் தன்னடன் நடித்த சஞ்சீவ் என்பவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு ஐலா அர்ஸ் என்று இரு குழந்தைகள் இருக்கின்றனர்.


தொடர்ந்து ராஜா ராணி சீரியல் 2 இல் நடித்து வந்த இவர் இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகினார். இதனை அடுத்து சன்டிவியில் இனியா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் ஆல்யாவுக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.


இந்நிலையில் தற்போது ஆல்யா உடைந்த காலுடன் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை அவரது கணவர் சஞ்சீவ் தான் வீடியோவாக வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement