• Jul 26 2025

விஜய் டிவியில் இருந்து சன்டிவிக்கு சென்ற ஆல்யா மானாசா-வெளியானது புதிய சீரியலின் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் ராஜா-ராணி.இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பேராதரவு கிடைத்திருந்தது. அத்தோடு இதில் கதாநாயகனாக சஞ்சீவ்வும் கதாநாயகியாக ஆல்யா மானசாவும் நடித்திருந்தனர்.

மேலும் இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்ள்.இவர்கள் இருவருக்கும் 2020 மார்ச் மாதம் அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

ஆல்யா மானாசா ராஜா ராணி சீசன்2 இல் நடித்து கொண்டிருந்த நிலையில் சஞ்சீவும் சன்டிவியல் ஒளிபரப்பாகுகின்ற கயல் நாடகத்தில் சைத்திராவிற்கு ஜோடியாக நடிக்கின்றார்.இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.இவ்வாறு இருக்கையில் மறுபடியும் ஆல்யா கர்ப்பமாகி இருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகி இருந்தார் ஆலயா மானசா.

இவ்வாறு நடிப்பதற்கு பிரேக் விட்டு இருந்த ஆலியா தற்போது விஜய் டிவியல் இருந்து சன்டிவிக்கு சென்று சீரியல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இவர் நடிக்கும் சீரியலின் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது இவர் நடிக்கும் சீரியலின் பெயர் இனியா.இதைப் பற்றி முழுமையான விரைவில் வெளியாகும்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement