• Jul 24 2025

ஆல்யா மானசாவின் இனியா சீரியலில் இணைந்த ரீல் மாமியார்- அடடே சூப்பர் காம்போ ஆச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியவர் தான் ஆல்யா மானசா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து இந்த சீரியலில் செம்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அத்தோடு இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்தார். இவருக்கு ஐலா ,அர்ஸ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


மேலும் ராஜா ராணி சீரியல் சீசன் 3 இலும் சந்தியா என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பப்படவுள்ள இனியா என்னும் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.இந்த சீரியல் வரும் திங்கட்கிழமை முதல் இரவு 9மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ராஜா ராணி சீரியலில் மாமியாராக நடித்து வருபவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement