• Jul 25 2025

ஆல்யா மானாசாவின் இனியா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலங்கள்- அப்போ டிஆர்பி வேற லெவலில் எகிறப்போகிறது

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் ஆல்யா மானசா.இந்த சீரியலில் இவருக்கு நல்ல ரீச் கிடைத்ததோடு இதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணமும் செய்துள்ளார்.

பின்னர் மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார்.பின்னர் குழந்தை பிறந்ததன் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற புதிய தொடரில், நாயகியாக நடித்து வருகிறார்.


குடும்ப கதையை மையமாக வைத்த இந்த சீரியல், தற்போது புதுப்பொலிவுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.இந்த சீரியல் கதாநாயகனாக நடிகர் ரிஷி நடித்து வருகின்றார். நீண்ட இடைவெளியின் பின்னர் இவர் சீரியலில் என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்களை மிகவும் குஷியடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இனியா சீரியலில், நெகட்டிவ் ரோலில் நடிக்க டாப் தொடரின் 2 வில்லி கதாபாத்திரங்கள் களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் வேறு யாரும் அல்ல, கலைஞர் டிவியின் கண்ணெதிரே தோன்றினாள் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் கவிதா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் இந்த சீரியலில் கமிட்டாகியுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. 

இவர்களின் வருகையால், இந்தத் தொடரின் டிஆர்பி டாப் ரேஞ்சுக்கு செல்லும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement