• Jul 25 2025

தனது தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமலாபால்-லேட்டஸ்ட் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால்.பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் க விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில் அமலாபால் கிராமத்துப் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். அத்தோடு பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும்  நடித்திருந்தார். இது தவிரஅம்மா கணக்கு, ஆடை, Cadaver, டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார். இவர் சமீபத்தில்   தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக லண்டனில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள டவர் பாலத்தில் நின்று விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.


 தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன்  'ஆடுஜீவிதம்', மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர், கைதி படத்தின் இந்தி ரீமேக் 'போலா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் நடிகை அமலாபால், தனது தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பழனி முருகனை வழிபட்ட பிறகு கோயில் வளாகத்தில் அமலாபால் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement