• Jul 24 2025

பாவனியின் ரகசியத்தை போட்டுடைத்த அமீர்...கடுங்கோபத்தில் திட்டித்தீர்த்த பவானி - ஓஹோ.. இதான் விஷயமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவனி. இந்த ஜோடி, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜோடி. இவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதி செய்த நிலையில், திருமணம் அடுத்த ஆண்டில்தான் என்று அறிவித்துள்ளனர். 

இதனிடையே அமீர் இயக்கத்தில் பாவனி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக இந்த ஜோடி காணப்படுகிறது. 

அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பாவனி. இதில் அதிகமாக அமீர் எடுத்த புகைப்படங்களே காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது அமீர் விளையாட்டாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பாவனியின் அழகின் ரகசியம் இந்த பவுடர் டப்பாதான் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பாவனி, டேய் மென்டல் என்று ரிப்ளை செய்துள்ளார். தான் யூஸ் செய்யும் பவுடர் டப்பா, மற்றும் அதை தான் யூஸ் செய்வதை புகைப்படமாக எடுத்து அதை சமூக வலைதளத்தில் அமீர் பதிவிட்டுள்ளதற்கு அவர் திட்டி தீர்த்துள்ளார். 

இவர்களது உறவு மிகவும் சிறப்பானது. திருமணத்திற்கு முன்பே, இருவரும் அதிகமான இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தனியாகவும் நண்பர்களுடனும் உல்லாசமாக பொழுதை போக்கி வருகின்றனர். 

Advertisement

Advertisement