• Jul 24 2025

அமிர்தவா? வர்ஷினியா? யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் எழில் – ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அத்தோடு இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும். பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.


இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான். தற்போது சீரியல் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

அத்தோடு முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் கோபி. தற்போது கதைப்படி பாக்கியாவின் இளைய மகன் அமிர்தா என்கிற விதவை பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அதற்கு பாட்டி தடையாக நின்று பணக்கார வீட்டு பெண் ஈவரியைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று குறியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் சோசியல் மீடியாவில் இந்த விஷயம் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.



அதாவது அந்த விடியோவில் எழில் பட்டு வேஷ்டியுடன் மாப்பிள்ளை கோலத்திலும் பணக்கார வீட்டு பெண் வர்ஷினி திருமண பெண் கோலத்திலும் தயாராக இருக்கின்றனர். இதனால் எழில் தற்போது யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு பாக்யலட்சிமி ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அத்தோடு அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் எழில் வர்ஷினியை திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று கூறிவருகின்றனர்.








Advertisement

Advertisement