• Jul 24 2025

திடீரென மயங்கி விழுந்த அமுதா...போட்டியல் வெற்றி பெற்றாரா.. .அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 உமா-பழனி இருவரும் திட்டமிட்டு அமுதா குடிக்க போகும் தண்ணீரில் மயக்க மருந்து கலக்கின்றார்கள்.

அமுதா தண்ணீரை குடித்தவுடன் தடுமாற, அன்னலட்சுமி மருமகளே விட்டுறாத மருமகளே விட்டுறாத என அவளை ஊக்கப்படுத்துகிறாள். அதன் பிறகு சிதம்பரம், நாகு இருவரும் அமுதா தோற்றுப் போய் குடும்ப மானத்தை வாங்கப் போற என சொல்கிறாள்‌.

நாகு பொம்பளைக்கு இது தேவையா என நக்கல் பேச அதை கேட்ட அன்னலட்சுமி, அமுதா வைராக்கியமானவ விட்டுக் குடுக்க மாட்டா என சிதம்பரத்திடம் கூறுகிறார்.

மாரிமுத்து அமுதாவிற்கான போட்டி வலுக்க அனைவரும் டென்ஷன் ஆகின்றனர். மாரிமுத்து முடியாமல் தோற்க கடைசியாக அமுதா மட்டும் சைக்கிள் ஓட்ட அவளுக்கு கண்கள் சொருக அமுதா வெற்றி பெற்றதாக  தெரிவிக்கின்றனர். அமுதா மயங்கி கீழே சாயப் போக செந்தில் அவளை தூக்கி கொண்டு போகிறான்.

அத்தோடு அமுதாவிற்கு செந்தில் தண்ணீர் குடுத்து கை, கால்களை தேய்த்து விட அமுதா கண் விழிக்காமல் இருக்கிறாள். அடுத்து மயக்கத்தில் இருக்கும் அமுதாவை பார்த்த சிதம்பரம் அன்னலட்சுமியிடம் என் பொண்ணுக்கு அப்படி என்ன மந்திரம் போட்டீங்க என கேக்க அன்னம் உங்களுக்கு வேணா அவ மகளா இருக்கலாம் எங்களுக்கு அவ குலசாமி என பதிலடி கொடுக்கிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.



Advertisement

Advertisement