• Jul 25 2025

விக்ரமனையே பதறவைத்த ஷிவின்- மைனா வெளியேறிய போது நடந்த சுவாரஸியமான சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார் அமுதவாணன். இந்நிலையில், மிட் வீக் எவிக்ஷன் மூலமாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் வெளியிட்ட அறிவிப்பு போட்டியாளர்களை திகைக்க வைத்திருந்தது.


வாரத்தின் நடுவே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் எனும் அறிவிப்பு தான் அது. இந்த மிட் வீக் எவிக்ஷனில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு ஹைடிராலிக் மேடை மீது ஏறவேண்டும். அது மறைவிற்கு பின்புறம் கீழே இறங்குகிறது. எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படும் போட்டியாளர்கள் அந்த ஹைடிராலிக் மேடை மூலமாக மீண்டும் மேலே வரலாம். ஆனால், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், மேடைமீது ஷிவின் நிற்க அசீம், விக்ரமன் மற்றும் மைனா உள்ளிட்ட போட்டியாளர்கள் அவரை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மேடை கீழே இறங்க ஷிவின் மறைகிறார். போட்டியாளர்கள் அனைவரும் பதட்டத்துடன் நிற்கும்போது,"மைனா, அசீம், விக்ரம் ஃபை  ஃபை" என்கிறார் ஷிவின். இதனைக்கேட்ட விக்ரமன் அவர் வெளியேறப்போகிறாரோ என நினைத்து "ஏய் என்ன ஆச்சு? ஷிவின்" என பதட்டத்துடன் கேட்கிறார்.


அப்போது, அங்கிருந்த மைனா, "அவ விளையாட்டுக்கு சொல்லுறா, கொஞ்ச நேரத்துல வந்துடுவா பாருங்க" என்கிறார். இருப்பினும் விக்ரமன் மற்றும் ரச்சிதா ஆகியோர் ஷிவின், ஷிவின் என பதட்டத்துடன் அழைத்துக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் மேடையின் வழியே ஷிவின் வெளிவருகிறார். இதை கண்ட போட்டியாளர்கள் உற்சாகமடைகின்றனர்.


Advertisement

Advertisement