• Jul 24 2025

பல வருடங்களுக்கு பிறகு அஜித் அளித்துள்ள பேட்டி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபருடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித் குமார். 

அதன்படி தற்போது துணிவு படம் உருவாகியுள்ளது.பல நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் பாங்காக்-ல் தொடங்கியுள்ளது. அங்கு துணிவு திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். ஆம், பட ப்ரோமோஷன், பேட்டி, பொது நிகழ்ச்சி என எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் அஜித்.

எனினும் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் அஜித் தனது வளர்ப்பு நாய்யுடன் போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் தனது பைக் பயணம் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





Advertisement

Advertisement