• Jul 26 2025

படவாய்ப்பைப் பெற புது ரூட்டை போஃலோ பண்ணும் ஆண்ட்ரியா-மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் நடிகர் ஆண்ட்ரியா.இவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் சில திரைப்படங்கள் நடித்துள்ளார். 

இவர் நடிப்பில் சமீபத்தில் அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, பிசாசு 2 உள்ளிட்ட திரைப்படங்களும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாக உள்ளது.இது தவிர, சில நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகின்றார்.


இந்த நிலையில் இவர் பிரபல சேனல் நடத்தும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். அப்போது உன் மேல ஆச தான், ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடல்களை ஆண்ட்ரியா பாட, மற்ற பாடகர்களும் ஏராளமான ஹிட் படங்களை பாடி இருந்தனர். நடுவே ஊ சொல்றியா பாடலை ரசிகர்கள் கேட்டதாக தெரியும் நிலையில், இதற்கு பதில் சொன்ன ஆண்ட்ரியா, "இப்போவே ஊ சொல்றியா பாடிட்டு வீட்டுக்கு போயிடலாமா?, இல்லைல்ல" என்றும் ஜாலியாக கேட்கிறார்.

ஆண்ட்ரியா பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களுக்கும் அங்கே கூடி இருந்த ரசிகர்கள், Vibe மோடில் ஆட்டம் பாட்டம் என்றும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதே போல, ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சியின் முழு வீடியோவைக் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.



Advertisement

Advertisement