• Jul 24 2025

சந்தானத்துடன் இணைந்து அப்படி ஒரு காட்சியில் நடித்த ஆன்ட்ரியா... உண்மையை போட்டுடைத்த உதயநிதி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் சிறந்த பாராட்டைப் பெற்ற திரைப்படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. இப்படமானது கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது.


இப்படத்தை வித்தியாசமான கதையம்சம் நிறைந்த வகையில் எம். ராஜேஷ் இயக்கியிருந்தார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடித்திருந்தார். இப்படத்தில் காமெடி நடிகராக சந்தானம் நடிச்சிருந்தார். இவர் இப்படத்தில் தனது இயல்பான நகைச்சுவையின் மூலம் திரையரங்கை தெறிக்கவிட்டார்.


மேலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்திருக்கின்றார் உதயநிதி. 

அதாவது இப்படத்தில் சந்தானத்துடன் காதல் ட்ராக்கில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தாராம். ஆனால், படத்தின் உடைய நீளம் கருதி ஆன்ட்ரியா காட்சிகள் தூக்கிவிட்டதாக அண்மையில் அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து கூறியுள்ளார். 

Advertisement

Advertisement