• Jul 23 2025

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்த அனிரூத்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் உருவாகவுள்ள லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்தப் படத்தில் முஸ்லிமாக அவர் நடிக்கவுள்ள நிலையில், அதற்காக தாடி வளர்க்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


லால் சலாம் படத்தைத் தொடர்ந்து செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 ஆகிய படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்களால்  மனிதம் காத்து மகிழ்வோம் என்னும் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இந்த தொண்ட நிறுவனத்தின் ஆரம்ப விழா மார்ச் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது.எனவே இந்த தொண்டு நிறுவனத்தின் தலைப்பை அனிரூத் அவர்கள் எழுதி ஆரம்பித்து வைத்துள்ளார். அத்தோடு ரசிகர்களுக்கு தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement