• Jul 25 2025

நயனைக் கட்டியணைத்த அனிரூத்- மகனுடன் வந்து திருமண வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான்

stella / 3 years ago

Advertisement

Listen News!

கடந்த ஜூன் 9ம் தேதி காலை 10 மணியளவில் திரை நட்சத்திரங்கள் பங்கேற்க பிரம்மாண்டமான முறையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோலாகலமாக மகாபலிபுரம் அருகே உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. சிகப்பு கலர் சேலையில் செழிப்பான அழகுடன் நயன்தாரா மணமகளாக மேடையை அலங்கரிக்க இயக்குநர் விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையில் மாஸ் காட்டினார்.

நயன்தாரா கழுத்தில் திருமாங்கல்யம் ஏறிய புகைப்படத்தை அப்போதே வெளியிட்டு இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். திருமணம் முடிந்த மறுநாள்திருப்பதி ஏழுமலையானை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் சாமி தரிசனம் செய்தனர்.

பிறகு கொச்சிக்கு சென்று அம்மாவை சந்தித்தார் நயன்தாரா. அங்கே விருந்து முடித்த இருவரும் பின்னர் ஹனிமூனுக்காக தாய்லாந்து பறந்து சென்றனர். நயன் மற்றும் விக்கியின் ஹனிமூன் ரொமான்ஸ் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வந்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டால்மென்ட் முறையில் தனது திருமண புகைப்படங்களை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு இணையத்தில் டிரெண்டாகி வருகிறார். தற்போது இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement