• Jul 25 2025

மீண்டும் விஜய் டிவியில் புத்தம் புதிய ரியாலிட்ரி ஷோவில் தொகுப்பாளினியாக களம் இறங்கிய அனிதா சம்பத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் மூலம் பல திறமையானவர்கள் கண்டெடுக்கப்பட்டு வெள்ளித்திரையில் மின்னுகின்றனர். அதிலும் விஜய் டிவியில் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி பெண் தொகுப்பாளர்களாக இருக்கும் டிடி, விஜே ரம்யா, பாவனா, பிரியங்கா இவர்களின் வரிசையில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தும் இணைகிறார்.

முன்பு சன் டிவி, நியூஸ் 7 தமிழ் போன்ற சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத் அதன் பிறகு சர்கார், காப்பான் உள்ளிட்ட படங்களில் நியூஸ் ரீடர் ஆகவே நடித்தார். அதன் பின் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.


மேலும் சோசியல் மீடியாவிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ளார்.  இவருடைய தமிழ் உச்சரிப்பு தெள்ளத்தெளிவாக இருக்கும். அதன் காரணமாகவே இப்போது விஜய் டிவி மூலம் அனிதா சம்பத்திற்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

விரைவில் துவங்க இருக்கும் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியை அனிதா சம்பத் தான் தொகுத்து வழங்கப் போகிறார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ் புலமை வாய்ந்தவர்கள் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற தகவல் அடங்கிய ப்ரோமோவை அனிதா சம்பத்தை வைத்து தான் விஜய் டிவி தயார் செய்யப் போகிறது.


மேலும் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அனிதா சம்பத் தற்போது விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவிற்குகே டஃப் கொடுக்கப் போகிறார். இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல விஜய் டிவியில் இருக்கும் இன்னும் சில நிகழ்ச்சிகளையும் அடுத்தடுத்து அனிதா சம்பத் கைவசம் வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement