• Jul 25 2025

என்னுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் படவாய்ப்புத் தருகின்றேன் எனக் கூறிய பிரபலத்தால் கடுப்பான அனிதா சம்பத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் அனிதா சம்பத். இருப்பினும் விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய பேச்சுக்கள் இவருடைய பெயரை பங்கம் பண்ணியது.அத்தோடு பிபி ஜோடிகள் நடன நிகழ்சியிலும் பங்கு பற்றி டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிலையில், அனிதா சம்பத் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒருவர் அனிதா சம்பத்தின் தோழியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அனிதா சம்பத்தின் தோழி இந்த மாதிரி வேலைக்கு.. நீங்கள் வேறு ஆளைப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் வரவேண்டுமென்றால் எளிதாக வாய்ப்பு கிடைக்காத ஒரே ஒருநாள் யோசியுங்கள் இதனை ஒப்புக் கொண்டால் பெரிய அளவில் உங்களால் வர முடியும் என்று பேசியுள்ளார்.

இந்த நபர் இப்படிப் பேசிய இந்த பேச்சை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதா சம்பத்துக்கு அனுப்பி உள்ளார் அவருடைய தோழி. இது குறித்து பேசிய நடிகை அனிதா சம்பத் இது போன்ற ஆட்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரை உலகில் இருக்கிறது என்று பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட கூறியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement