• Jul 25 2025

அஞ்சலி எனக்கு காதலி மட்டும் இல்லை... விக்கி கூறியதைக் கேட்டு ஆடிப் போன ஸ்வேதா... 'MR.மனைவி ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் விக்கிக்கு அஞ்சலில் இரத்தம் கொடுக்க வந்த போது ஸ்வேதா அவரைத் தடுத்து அனுப்பியிருந்தார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் விக்கி "நான் இப்ப அஞ்சலியைப் பார்த்தே ஆகணும்" எனக் கத்துகின்றார். அதற்கு ஸ்வேதா "அவளுக்கு எந்த அக்கறையும் உன் மேல இல்லை" எனக் கூறுகின்றார். பதிலுக்கு விக்கி "இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்" என்கிறார்.  


மறுபுறம் விக்கி "இவ்ளோ நாளும் அஞ்சலி எனக்கு காதலியாக மட்டும் தான் தெரிந்தா, ஆனால் இன்னையில இருந்து அவங்க எனக்கு உயிர் கொடுத்த கடவுளாக தெரியிறாங்க" என்கிறார். இதைக் கேட்டதும் ஆடிப் போய் நிற்கின்றார் ஸ்வேதா. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. 


Advertisement

Advertisement