• Jul 25 2025

அண்ணா சீரியல் நடிகர் செந்தில் வீட்டில் நடந்த விஷேசம்- வாவ்...அதுக்குள்ள இவ்வளவு பெரிதாக வளர்ந்திட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் சீரியல் நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் மிர்ச்சி செந்தில். அந்த வகையில் இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு நல்லதொரு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.


இவர் தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.சரவணன் மீனாட்சி தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வருடம் கழித்து சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.


தற்போது செந்தில் - ஸ்ரீஜா மகனுக்கு தற்போது கேரளாவின் திருவல்லாவில் இருக்கும் ஸ்ஸ்ரீ வல்லபநாத சுவாமி கோவிலில் அன்னபிரசன்னம் நடைபெற்று இருக்கிறது.குழந்தைக்கு முதல் முறையாக solid food கொடுக்கும் நிகழ்ச்சி இது என மிர்ச்சி செந்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 


இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அடடே செந்திலின் மகன் வளர்ந்திட்டாரே என்று கூறி வருவதோடு ஸ்ரீஜா மீண்டும் எப்போது நடிக்க வருவீங்க என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement