• Jul 25 2025

அதிகாரப்பூர்வமாக வெளியானது அண்ணா சீரியல் ஒளிபரப்பு நேரம் மற்றும் தேதி - செம ஹப்பியில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் புது பது சீரியல்களாக இறக்கி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்திரா, கனா, சண்டக்கோழி, மாரி கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, அமுதாவும் அன்னலட்சுமி, சீதாராமன் போன்ற சீரியல் நல்லா வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த சீரியல்களை தொடர்ந்து அண்ணா என்ற புத்தகம் புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம். ஏற்கனவே பல சீரியல்கள் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்கிறார்.

மேலும் பிரபல நடிகர் ரோசாரி செந்தில் அப்பாவாக நடிக்க சுனிதா, விஜே தாரா, ப்ரீத்தா சுரேஷ், ஹேமா சின்ராஜ் ஆகியோர் செந்திலின் தங்கைகளாக நடிக்கின்றனர். இன்னும் பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

ஏற்கனவே சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நித்யா ராம் இடம்பெற்று வந்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.இந்த வீடியோவில் அண்ணா சீரியல் வரும் மே 22ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக மிர்ச்சி செந்தில் தன்னுடைய அம்மா தங்களை விட்டு ஓடிச் சென்று விட்டதால் ஏற்பட்ட அவமானங்களை தனது தங்கைகளை கட்டுப்பாடுகளோடு வளர்த்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானங்களை மாற்றி அமைக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

இதற்கு இடையில் அவருடைய மாமன் மகளான நித்யா ராம் மீதும் காதல் வருகிறது. அதன் பிறகு செந்தில் வாழ்க்கையில் நடக்கப் போவது என்ன என்பதுதான் இந்த சீரியலில் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement