• Jul 24 2025

ரோகினியின் பியூட்டி பார்லர் விஷயத்தில் சந்தேகப்படும் அண்ணாமலை- பதட்டத்தில் நிற்கும் விஜயா - வெளியாகிய ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரிய் தான் சிறகடிக் ஆசை. நடுத்தர குடும்பத்தினரின் வாழ்ககை முறையை எடுத்துக் காட்டும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இதில் விஜயா மனோஜிற்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக முத்துவையும் மீனாவையும் அவரது பாட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனால் முத்துவும் பாட்டியும் அங்கே சந்தோஷமாக இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க விஜயா ரோகினிக்கு தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை அடைவு வைத்து பியூட்டி பார்லர் திறக்க உதவி செய்கின்றார். இதனால் ரோகினியும் புதிதாக பியூட்டி பார்லர் ஓபன் பண்ணி விடுகின்றார்.

இந்த திறப்பு விழாவுக்கு விஜயாவுடன் சேர்ந்து அண்ணாமலையும் சென்றுள்ளார். அங்கே ரோகினி பியூட்டி பார்லரை விஜயாவின் பெயரில் ஓபன் பண்ணி இருப்பதோடு விஜயாவுக்கு மாலை அணுவித்து மரியாதையும் செலுத்துகின்றார்.

இதனை எல்லாம் பார்த்த அண்ணாமலை ரோகினி பண்ணுறது எல்லாம் பார்த்தால் இந்த கடை திறப்பு விழாவுக்கு நீ தான் பணம் கொடுத்த மாதிரி இருக்கே எனக் கேட்கின்றார். இதைக் கேட்ட விஜயா அதிர்ச்சியடைகின்றார்.இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement