• Jul 24 2025

விஜய்க்கு விட அண்ணாசிக்கு தான் அதிக விசில் பறக்கும்- லியோ படம் குறித்து அந்தணன் கொடுத்த ரிப்ளே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அந்த படம் எல்சியூவா? என்றும் ஸ்பெஷல் கேமியோக்கள் விக்ரம் படத்தை போல இந்த படத்திலும் இருக்குமா? என ரசிகர்கள் லியோ பற்றி நாளுக்கு நாள் புதிய கதைகளையும் எதிர்பார்ப்புகளையும் கிளப்பி வருகின்றனர்.

லியோவின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே தற்போது 400 கோடி ரூபாய் கடந்து விட்டதாகவும், கன்ஃபார்ம் படம் 1000 கோடி அள்ளும் என்றும் இப்பவே எதிர்பார்ப்புகளை கிளப்ப ஆரம்பித்து விட்டனர்.


கமலின் விக்ரம் படத்தில் சூர்யா அதிரடி கேமியோவாக வந்ததை போல விஜய்யின் விக்ரம் படத்தில் கேமியோ இருக்குமா என்றும் இந்த படம் எல்சியூவா என்றும் ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி என பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், கடைசியில் லெஜண்ட் சரவணன் பெயரும் சமீபத்தில் காஷ்மீரில் இருந்து அவர் வெளியிட்ட போட்டோக்கள் மூலம் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

இது தொடர்பாக பிரபல சேனலுக்கு பேட்டிக் கொடுத்த வலைப்பேச்சு அந்தணன் கண்டிப்பாக இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் கேமியோ இருக்காது என்றும் அவர் ஹாலிடே கொண்டாட அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை வைத்து ரசிகர்களே கிளப்பி விட்டது தான் இது எனக் கூறி உள்ளார்.


அப்படி ஒரு வேளை லியோ படத்தில் லெஜண்ட் சரவணன் கேமியோவாக வந்தால், நிச்சயம் தியேட்டரில் விஜய்யை காட்டும் போது பறந்த விசிலை விட அண்ணாச்சிக்கு அதிகமாகவே விசில் பறக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும் அந்தனணன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவாக முடிக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement