• Jul 25 2025

அண்ணாத்த பட நடிகையை உருட்டுக்கட்டையால் தாக்கிய அவரது மாமனார் மாமியார்- அட அவருக்கு செய்த கொடுமையைப் பாருங்க

stella / 3 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான அண்ணாத்த மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை சிவரஞ்சனா. இவர் அண்மையில் மாமனார் மற்றும் மாமியார் மீது கொடுத்துள்ள புகார் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அதாவது நடிகை சிவரஞ்சனா. எருகம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். மனநலம் சரியில்லாதவரை இவருக்கு ஏமாற்றி திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், தான் நடிகையாக இருப்பதால், தொடர்ந்து தனது மாமனார் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்

இதுதொடர்பாக பேசிய சிவரஞ்சனா தனது மாமனார் சரவணவேல், நான் ஒரு நடிகையாக இருப்பதால், எதையும் அட்ஜெஸ்ட் செய்து போவேன் என நினைத்து மறைமுகமாக பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சில நேரங்களில் அவர் எல்லை மீறிய நிலையில், நான் அவரை தட்டிக் கேட்டேன். ஆனால், என்னை உருட்டுக் கட்டையால் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து தாக்கியதில் எனக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன என பகீர் கிளப்பி உள்ளார்.

மேலும் முகத்தில் காயத்துடன் போலீஸில் துணை நடிகை சிவரஞ்சனா புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இவ்வளவு பிரச்சனை நடந்த பின்னரும் இந்த வீட்டில் ஏன் இருக்கீங்கன்னு கேட்கிறாங்க, நான் எந்தவொரு தப்பும் பண்ணல, நான் ஏன் போகணும், பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வேன். தலைமறைவாகி விட்ட என் மாமனாரை காவல் துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த பிரச்சனையை சும்மா விட மாட்டேன் என சிவரஞ்சனி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement