• Jul 25 2025

'குக்வித் கோமாளி' ஷோவில் இருந்து வெளியேறும் மற்றுமோர் கோமாளி.. அட கடவுளே இவருமா..? ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.


மேலும் இந்நிகழ்ச்சியானது இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தற்போது இதன் 4-ஆவது சீசனும் ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.

கலகலப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை திடீரென வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது இந்த சீசனில் கோமாளியாக இருந்து வந்த குரேஷி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என ட்வீட் ஒன்று வைரலாகி வந்தது. ஆனாலும் அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எது உண்மை என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.


எது எவ்வாறாயினும் குரேஷி வெளியேறுகிறார் என்ற செய்தியானது குக் வித் கோமாளி ஷோ ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement