• Jul 26 2025

அதிர்ச்சி.. தொடர் உயிரிழப்புக்களால் சோகத்தில் திரையுலகம்.. மற்றுமோர் பிரபல நடிகர் மரணம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக அடுத்தடுத்து இடம்பெற்று வரும் தொடர் மரணங்களால் திரையுலகமானது அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. அந்தவகையில் தற்போது மற்றுமோர் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. அதாவது பிரபல ஹாலிவுட் நடிகரான ரிக்கோ பிரவுனிங் மரணமடைந்துள்ளார்.


இவர் குறிப்பாக 1950-களின் 3 டி கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படமான 'கிரியேச்சர் பிரம் த பிளாக் லகூன்' என்ற படத்தில் நீருக்கடியில் நடித்ததற்காக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாது 'பிளிப்பர்' என்ற ஹாலிவுட் படத்திலும் அவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது. 


நடிப்பில் மட்டுமல்லாது சில படங்களை டைரக்டு செய்தும் இருக்கின்றார். அத்தோடு ஸ்டண்ட் நடிகராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் மட்டுமல்லாது இவர் ஒரு நீச்சல் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் நடிகர் ரிக்கோ பிரவுனிங் வயோதிபம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சமீபகாலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ரிக்கோ பிரவுனிங் மரணம் அடைந்திருக்கின்றார். அவருக்கு தற்போது வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்கோ பிரவுனிங் மறைவுக்கு நடிகர்-நடிகைகள், ரசிகர்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இவர் வயோதிபம் காரணமாக இறந்திருப்பினும் சினிமாவில் அடுத்தடுத்து இடம்பெறுகின்ற தொடர் மரணங்கள் பலரையும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement