• Jul 24 2025

தளபதி 67 படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை- அடடே இப்போ த்ரிஷாவும் நடிக்கிறாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பூஜை கடந்த டிசம்பர் 5ம் தேதி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டது. ஆனால், அதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் சமந்தா நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தளபதி 67 பூஜையில் த்ரிஷா கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் இப்படத்தில் தளபதி 67 படத்தில் இன்னொரு சூப்பரான ஹீரோயினும் கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வணக்கம் சென்னை, எல்கேஜி, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பிரியா ஆனந்த் தான் அந்த ஹீரோயின் என்றும் தளபதி 67 பூஜையில் அவரும் கலந்து கொண்டார் என பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.


கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் தளபதி 67 படத்தில் மெயின் வில்லனாக நடிக்கப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. மேலும், அர்ஜுன், சாண்டி மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் வில்லன் கேங்கில் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement