• Jul 25 2025

அர்னவால் கைவிடப்பட்ட மற்றுமொரு பெண்- நீண்ட நாளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த திவ்யா ஸ்ரீதர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் திவ்யா ஸ்ரீதர். இவர் சீரியல் நடிகரான அர்னவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதி சில மாதங்களுக்கு முன் பிரிந்தனர். இந்த தகவல் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பிரிந்துவிட்டனர், திவ்யாவிற்கும் அண்மையில் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் தான் திவ்யா அர்னவ் குறித்து ஒரு பேட்டியில் பகீர் தகவல் கூறியுள்ளார்.அதில் அவர், அர்னவுடன் பிரச்சனை போய்க் கொண்டிருந்த நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் மெசேஜ் செய்தார்.


அதில் என்னுடைய தோழியையும் அர்னவ் இப்படித்தான் ஏமாத்திட்டார் என அவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதைப்பார்த்ததும் நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன்.அர்னவுக்கு இலங்கை பெண் ஒருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது, என்னவெல்லாம் நடந்தது என கூறியிருந்தார் அந்த பெண்.

ரசிகையாக பேச வந்த அந்த பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி பின் அந்த இலங்கை பெண்ணை கை விட்டுள்ளார், இதற்கு அர்னவ்வின் நண்பரே ஆதாரம் என திவ்யா கூறியுள்ளார். திவ்யா கணவன் கைவிட்டாலும் குழந்தைகளுடன் ஷுட்டிங்கிற்கு வந்து போகும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement