• Jul 25 2025

ஜெய்பீம் திரைப்படத்திற்காக சூர்யா செய்த மற்றுமொரு சுவாரஸியமான விடயம்- அடடே இது ரொம்ப வித்தியாசமாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் டி.ஜே.ஞானவேலு இயக்கத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ‘ஜெய்பீம்'.உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

மேலும் இத்திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படமாகவும் மாறியது.சமுதாயத்தைச் சேர்ந்த தம்பதி மீது காவல்துறையால் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டது. 


இந்த படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், அனைத்தையும் கடந்து 'ஜெய்பீம்' திரைப்படம்ஆஸ்கர் பட பட்டியலில் 100 படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. பின்னர் எதிர்பாராத விதமாக இப்படம், அந்த பட்டியலில் இருந்து வெளியேறியது.


இந்நிலையில் இந்த படத்தில் படக்குழுவினருடனான கலந்துரையாடல் குறித்த இடம்பெறும் வகையிலான புத்தகத்தை 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில், வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அருண் என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement